This is part 2/2. If you have not read Part 1, please visit http://ragsgopalan.blogspot.com/2009/09/blog-post.html
Contemporary:
இயந்தரமான இவ்வுலகில் இயக்கமாக இருப்பவன் நீ
கண்கள் இல்லா அரசனும், கருத்து இல்லா அமைச்சனும்
கலியில் இருந்து ஆளவே, மக்கள், மீளா துன்பம் கொள்ளவே!
வேத கோஷம் மங்கவும், கற்பு நெறி குறையவும்!
அறுதொழிலோன் சிறுக்கவும், அற நெறிகள் மறையவும்!
கலியில் வந்து ஆடிடும் கர்ம பந்தம் நீயடா!
சோம்பி திரிந்து நான் வாழ உதவி செய்யும் ஊர்தி நீ
ஊர்ததியின் துர் மூச்சாம் மாசுக் காற்றை அளிப்பவன் நீ
முதுகு தண்டு வளைந்திருக்க பீந் பாக் (bean bag) ஆக இருப்பவன் நீ
எந்தன் எண்ணம், வைகரியை தொலைவில் சேர்க்கும் செல் போன் நீ
எந்தன் மடியில் நிரந்தரமாய் இயங்கி கிடக்கும் கணினி நீ
உருவம் இல்லா இணைய தளம் உன் வடிவம் விளக்க தந்தாய் நீ
எந்தன் எண்ண வ்ருதிகளை காற்றில் சேர்க்கும் மின் அலை நீ
எங்கோ இருக்கும் செய்திகளை எண்ணிடம் சேர்க்கும் கூகல் (google) நீ
என்னுள் ஒளிரும் பெருஞ் சுடரை மறைத்து வைத்த மாயை நீ!
(Vaikari in line 4 is as in Para, Pasyanti, Madhyama and Vaikari - 4 states of sound, Para is at the source, Pashyanti is at the navel level, Madhyama is in Heart and when it comes as sound from our vocal cord its called as Vaikari)
நாதத்தின் நாதன் உன்னை நாயேன் நாடினேனே!
வாதத்தின் வன்மையால் வழி மாறி வாடினேனே!
வாய் திறந்து புலம்புகின்றேன் வாசியோகம் யான் அறியேன்!
வந்த வழி நான் மறந்தேன், வீடு தேடி அலைகின்றேன்!
Sidhas call their Yoga as Vasi Yogam...
கண்டம் கட்டி அண்டம் காத்த நீல மங்கை வலத்திலே
ஆலம் உண்ட கால கண்டன் நீயும் என்னை அணைத்திலாய்!
செல்வம் தந்து செருக்கு ஏற்றும் ஸ்ரீயை மார்பில் கொண்டுள
வெண்ணை திருடி உண்ட பாலன் நீயும் என்னை அணைத்திலாய்!
நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே!
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே!
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்!
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!
First line above is borrowed from Thirumandiram, Nayottu mandiram is "Chi" (thats how you drive a dog away and this is Maha Karana Panchaksharam)
வானரம் போல் நான் இருக்க வான் அறம் போல் நீ இரு!
குட்டி தன்னை கவ்விச் செல்லும் தாய் பூனை போல நீ இரு!
நினைவாலே முட்டைகளை அடை காக்கும் தாயாமை போல நீ இரு!
என் வினையும் என் வினையோ? வினை பயனும் ஓர் பயனோ!
எவ்வினாக்கும் ஓர் விடை தான்! உன் வினை தான்! அதன் பயன் தான்!
என் உள்ளே ஒளிந்திட்டு எல்லாமும் செய்வித்தாய்! இதையும் நீ சொல்வித்தாய்!
அம்பலத்தில் ஆடுவோனும், அரங்கத்தில் துயிலுவோனும் ஓர் வித்தின் இரு வடிவே உணராது வாழ்ந்தேன் நான்!
ஆடி அடங்கும் வாழ்க்கையில் நாடி ஓடி தேடினேன் ! தேடி தேடி வாடினேன்!
வினை இல்லா வித்தே நீ! வாடும் என்னை நாடிடு ! தேடும் என்னில் சேர்ந்திடு!
"நான்" இல்லா நானும் நீ, ஆதியந்தமாயிருக்கும் எல்லாமும் நீயே!
There are 2 Nyayas discussed in our Indian philosophy which explains the way to approach god. One is the monkey's way - If you have seen the baby monkey it holds on to its mother tightly and mother shall jump from tree to tree and it shall not hold its baby. We can get attached to god that way and not leave god under any circumstances. The other way is the Cat's way (Marakara Nyaya) - the mother cat carries its kitten with its mouth holding its neck and takes it to safety. Here the kitten does not do anything. So the above phrase says that i shall be like monkey holding on to you but you (God) be like a cat and treat me like a kitten.
Also there are 3 interesting types of birth discussed in most of the literatures:
1. Tortoise - It lays eggs in the shore, buries it, goes to the sea and swims. But the mother tortoise always thinks about the eggs and incubates the eggs with its thoughts. Just thoughts!, thats how the eggs are hatched. Think and deliver! Amazing isnt?
2. Fish - It lays eggs and just keeps on watching the eggs and incubates them with their eyes!... See and Deliver! Can you correlate why goddess Meenakshi is named so?
3. The metamorphosis of larva to a fly. Here the mother fly keeps banging its face against the larva and converts them from larva to fly. Again think, act and deliver!.
I have used just the 1st aspect in the para above.
Happy reading!
I should thank my friend Ganesh Babu for rubbing on the right side with his 4 line poetry which i recognize has propelled me to do this piece! Thanks Ganesh..
PS; the pain in typing in tamil continues. I am unable to change many words as i like or as it should be. Eg. At places, am unable to get type the second "Na" at all.
I also have to confess that in few places i genuinely did not know which letter to put (first letter or second). Then i realized that there is nothing surprising here.