Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Monday, September 27, 2021

நான்கொண்ட அன்பிலே சிக்கியதும் ஓர் அற்புதமே!

 This is a song I scribbled pretty quickly... I could not build up on this. So this is Othhai Paatu...(ஒத்தபாட்டு)


மான்கொண்ட மலைமகள் மணாளன் மண்ணுயிராய் என்

ஊன்கொண்ட மும்மலமாய் முக்குணமாய் செரிந்ததும் ஏன்? அன்று

கூன்கொண்ட பேரிளம்பெண் பிட்டுக்கு‌ மொத்துண்டழகன்

நான்கொண்ட அன்பிலே சிக்கியதும் ஓர் அற்புதமே! 


Happy Reading!

வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்!

 Musings: வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்


 சந்தை யாம் இவ்வுலகில், சத்தியத்தை நாடியே

நிந்தை யதை செய்யாமல் அரவிந்தமதை பாடியே

சிந்தை வழி ஏகாமல் சிவன் வழி ஏகியே

வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்!!

நாடும் நலமும் சிவமே கொள்!

I blogged this as Guru Vandanam on the Occasion of my birthday this month. 


ஆடும் மனமும் அலைகடல் துரும்பாய்

தேடும் பொருளே சதமென எண்ணி

ஏடும் அறிவும் அறியா என்னை

ஓடும் இன்பம் சிறு பணித் தேடி


வாடும் என்னை கருணை மேவி

மேடும் மடுவும் வாழ்க்கைப் பயணம்

காடும் மலையும் திரியவும் வேண்டாம்

கோடும் கோளும் பிறவி வினையை


சாடும் அருளே குருவின்  நயணம்

வீடும் உறவும் மூவிறு ஆறாய் (36)

ஈடும் இனணயிலா அன்பர் கூட்டில்

கூடும் கருனண என்னனென சொல்வேன்


நீடும் வாழ்வில் நிம்மதி ஈந்து

கேடும் பிணியும் எனை விட்டோட

கூடும் உயிரும் குலவும் பொழுதே

நாடும் நலமும் சிவமே கொள்ளென


தேடும் சிவநெறி நன்மதிக் கூட்டி

பாடும் திறனும் பாங்காயருளி

ஆடும் சட்டை முனியின் நடனம் 

பீடும் விலக்கி நம்மை வீடு சேர்க்குமே!

Tuesday, July 24, 2012

Musings: Calmness of my Conscience that scares me deep!


Fear is very often topic and tool for many of our academicians, philosophers and leaders. We have read / heard many on this. I had always believed in the quote Fear is the mother of morality. ~Friedrich Nietzsche

Not just of morality but our current day religion and rituals are more of a byproduct of fear and nothing more. You may like this http://ragsgopalan.blogspot.in/2009/01/musings-ignore-god-and-extol-godliness.html


Alternatively, If you are not scared of fear then the fear shall be scared of you. This is a slightly modified (one of my favorite) quote of Thiruvalluvar who quote on troubles as “இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்”.

Coming to the current musing, this is a reflection on 2 things:

1.      The extent of social ills like corruption, absence of any discipline, adherence to law and lack of speedy justice to the society are all linked primarily to the silence of the majority who are law abiding, virtuous, benevolent and right minded. It’s their silence, tolerance and “Chalta Hai” attitude which is exploited by the leaders of our time. This needs to change and this change can start only with the self. Hence I have concluded that it’s the calmness of my conscience that troubles me most. If my conscience is not calm then it would propel me into corrective action which at a larger context would reflect in the society.

2.    I was listening to song, “Achha Paththu (அச்சப்பத்து)” from Thiruvaasagam (திருவாசகம்) last evening and was inspired by that. If someone knows to read Tamil they should certainly read this gem http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=81350.
This is very nicely put into tune by Maestro Ilayaraja here. Some of the puritans may like the classical Carnatic version but I love this one too. http://www.youtube.com/watch?v=6E935l0XVWk

3.      Ok. If you don’t know Tamil, then I suggest that you learn Tamil just to read Thiruvaasagam (திருவாசகம்) and you would thank me for the rest of your life. J

Now on to this blog:

Ain’t scared of fiery Volcanoes
Shaky quakes & Tsunami waves
Scarred ain’t of fires & floods
The poisons slow & the sands quick
But, dreaded I am at my deceitful friends!
Yeah! Dreaded I am at my deceitful friends!!

Ain’t scared of poisonous Snakes
The Elephants Lonely & the charging ox
Ain’t scared of the fiery beasts
Their hungry eyes, teeth & claws
But, Qualms I have at the cunning fox!
‘Coz, it’s the breach of faith by the cunning fox!

Ain’t scared of glamorous glances
Luscious lips & sensuous smiles
Scarred ain’t of the curvy hips
The husky words or the swaying backs,
But angst I have on stabbing my back!
Ouch!!
It’s stabbing my back that I can’t stand!!

Ain’t scared of sticks and swords
Shapely spears & deadly weapons
Scarred ain’t of the unnatural deaths
The Deadly diseases & daily disorders
But I panic at my thirsty lusts
The ever growing greed & my lofty pride!!

Ain’t scared of the heaven & hell
The gods multiple & the meaningless rituals
Scarred ain’t of the religious terrorists
Fatal fundamentalists, their caste & creeds
But jitters I get when justice is delayed
For Justice delayed is justice denied!!

Ain’t scared of the leaders corrupt & the media biased
The changing values and the uncertain times
Scared ain’t to fight with the might,
To take a tough call or to temporarily fall
But it’s the reticence of the righteous that scares me deep!

It’s the silence of the spiritual that scares me deep!
It’s the apathy of the honest that scares me deep!
It’s the voicelessness of the virtuous that scares me deep!
It’s the muteness of the meritorious that scares me deep!

It’s the quiescence of the educated that scares me deep!
It’s the tolerance of the trustworthy that scares me deep!
It’s the taciturn of the truthful that scares me deep!
It’s the inaction of the benevolent that scares me deep!

Above all,
It’s the calmness of my conscience that scares me deep!
It’s the calmness of my conscience that scares me deep!!

Happy reading!

Friday, April 20, 2012

மகனை இழந்த ஓர் தாயின் புலம்பல்!

Just another attempt... Dedicated to thousands of Jawans, CRPF, Policemen who sacrifice their life for the sake of the country and our welfare. I scribbled this yesterday on a flight between Bangalore and Mumbai. I am not sure how can we repay their service!

ஆனிப் பொன் தொட்டிலிலே ன்
உயிராலே உனக்கு அன்பூட்டி!
குருதியை அமுதாக்கி உன் ஊனிலே
இதயத்தால் நான் ஊட்டி!
வீரத்துடன் மானம் அறம் அன்பும்
உன் என்புடன் உரம் சேர்த்தே!
நற்சீலத்துடன் வளர்த்த உன்
தேகமும் இன்று அழிந்ததுவோ?

காலத்தே நீ பயின்ற மறை
ஞானமும் கல்வியும் அறிவியலும்
ஞாலத்தே நீ வென்ற நிறை
போர்களும் வில்வாட் போட்டிகளும்
மோனத்தே நீ நயந்த பர
நாதமும், அருள் இறைக் காட்சிகளும்
ஓலத்தே நான் வாட, குரு தந்தையின்
தவம் உனைக் காக்கிலையோ?

பாய்ந்து வரும் கொடும்புலியை இடக்கையாலே,
மேலும் சீறி வரும் விஷப் பாம்பை வலக்கையாலே!
மோத வரும் மதயானை மின் பார்வையினாலே
அடக்கிய அப்பேரழகை இனி எங்கு காண்பேன்?

திணவெடுத்த பெருந்தோளை அருள் விழியை
மலைதிடத்தை மிகுந்த உன் மார்பகத்தை
பலர் கூடி எதிர்தனரோ? ஓர் வலிமையில்லா
பல கோழைகளும் மறைந்து போர் தொடுத்தனரோ?

காயாகி கனியாகி பின்பு
வெம்பியே வீழ்ந்திடாமல்!
நோயிலே உழன்று நீயும்
நரைக் கூடி மாயந்திடாமல்!
பாயிலே கிடந்து கைகால்கள்
வீங்கித் தோய்ந்திடாமல்!
கனியனாய் போரில் காய்ந்தாய்
நின் வீரத்தை வாழ்துவேனே!


Happy Reading!

Saturday, March 24, 2012

தத் த்வாரா (TAT Dvara)

A prayer to Ganapathi is the first thing that is done in any activity in Hinduism. Irrespective which sect you belong to like Shaivism, Vaishnavism, Kaumaaram, Shaaktam etc, first obeisance to Lord Ganapathi is common to all. Since he is common to all the paths in the journey of spiritual evolution - it is always "through him" (Tat Dvara). There is also a thought that you don't have to pray any other devata and praying Ganapathi is just sufficient to attain whatever we want. Tat means that, Dvara means way or path. I just scribbled this prayer song with the "Tat Dvara" concept:


கரியதோர் முகத்தையுற்ற ஐங்கரனை நாமும் தொழவே
அரியதோர் கலைகள் ஞானம் நாடியே நம்மை நல்கும்
கிரியதோர் விரலில் கொண்ட கரியவனின் கருணைக் கிட்டும்
நரியதோர் பரியதாக்கிய பரமன்தாள் நுண்ணறிவாய் எட்டும்

பெரியதோர் மாயை என்ற பொய்த்திரையும் விலகிப் போகும்
பொரியதோர் ஐந்துமொன்றி மறைப்பொருளைக் நன்குக் காட்டும்
உரியதோர் நெஞ்சும் உருகி மெய்ப்பேரொளியாய் உட்கலக்கும்
சிறியதோர் புல்லை யொத்தோர்க்கும் நின்பேரருளால் வீடு கிட்டும்!!

Happy reading!

வானவில் (Rainbow)


அதோ பார்!
வானத்தில் வானவில்!
எவ்வளவு அழகு, 
எவ்வளவு இனிமை
என்றது ஒரு கூட்டம்
வானத்தின் பெருமையை
பாடியது ஒரு கூட்டம்
மழையின் அழகை 
பாராட்டியது ஒரு கூட்டம்
எல்லாம் ஆமோதித்தது 
மற்றோருக் கூட்டம்

அதைக் கண்ட ஒரு துறவி கூறினார்:

மடையர்களே!!
வானத்தில் இல்லை வானவில், அது 
உங்கள் கண்களில் இருக்கிறது! அந்த

வாயை பிளந்து வானையே
பார்ப்பதை நீ நிறுத்தியே!!
ஊனைக் கடந்து உயிரிலே
உற்று நோக்க வல்லீரேல் அந்த

நீலவானம் உன் கண்ணுள்ளே, அந்த
கரியமேகம் உன் கண்ணுள்ளே,அந்த
வளைந்த வடிவம் கண்ணுள்ளே, அந்த
ஏழுவர்ணம் உன் கண்ணுள்ளே, 

ஐம்புலனின் ஓட்டம் நிறுத்தியே 
கருத்தை கொஞ்சம் திருத்தியே, அந்த
நோக்கம் இல்லா நோக்கிலே அந்த
பார்வை இல்லா பார்வையில்

ஏழு வர்ணம் தெரிந்திடும், அந்த
வானவில்லும் மலர்ந்திடும்!

Happy reading!

Monday, March 19, 2012

வட்டமே உன் தொடக்கம் எங்கே?

I read this English poem in a social forum and was very inspired. I scribbled the Tamil poem below which isn't a translation but reflects some of the concepts with some improvisation. Hope you like it :). 

A poem inspired by the zen calligraphy ichi en so by shingai tanaka.

Where does the circle begin?
Is it a line you guess with your pen?
Is the passage of time
just a spin of a dime
along crooked line
to a finishing sign?
If you go on and on
feeling lost, feeling numb,
will you find what you want
in this meaningless hunt?

Where does the circle begin?
Is it the distance you run from your sin?
Is your knowledge of past
what sustains you to last,
what you've seen,
what you've done,
under moon
under sun?
If you keep looking back
on your life in the black
will you see what you want
in this meaningless hunt?

Where does the circle begin?
Is it the distance you mark from a pin?
If you run round the edge
on the cusp of the ledge
searching bush, searching hedge
in the seas that you dredge
if you look for the one
under heaven and sun
will you find what you want
in this meaningless hunt?

Where does the circle begin?
Can you trace another thats been?
If you copy your father,
your mother,
your brother
will you find your true self
or will you still suffer?
Is there a template for you
to know what is true?
Can you find what you want
in this meaningless hunt?

Where does the circle begin?
I'll tell you, I've seen it, I've been!
It is born in the sound of the voice of the ground
and the moon and the stars
and the sky that is ours
and the compulsion to ask!

And though I stand on the sand
With my heart in my hand
I can hear there's a sound
In the darkness I found

For there is infinite possibility
In the depths of my limits, see
From a seed grows a tall tree
And the knowledge we're born free!

And in the sound that I found
In the voice of the ground.
And the resonant art
Of my hand and my heart

Where does the circle begin?

Its easy, its drawn from within! 

-----------

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

ஓர் விட்டத்தின் சுற்றும் வடிவோ? நீ
ஓர் புள்ளியின் எண்ண வரையோ? நீ
ஓர் ஆரையின் அளவு அசைவோ? நீ
ஓர் பரிதியின் முழுமை அளவோ?
(விட்டம் = Diameter, ஆரை = Radius, பரிதி = Circumference)

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

ஓர் மையத்தில் நங்கூரம் கொண்ட
நேர்கோட்டின் சுழன்ற பாங்கோ?
ஓர் கூர்முனையே இல்லா நீயும்
எம்முனைக்கும் வடிவ வியலோ?

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

மூலத்தின் முழுமுதற் பொட்டோ?
காலத்தின் பொற்கோலம் நீயோ? நீ
சீலத்தின் நற்செம்மை வடிவோ? நீ
ஞாலத்தின் ஞானப் பொழிவோ?

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

ஓர் விதியின் விளையா வித்தோ? நீ
ஓர் வித்தில் விளையும் வினையோ?
வளைவயே இலக்கணமாய் கொண்ட
இருப்புள்ளிகளின் வினையும் நீயோ?
A circle is a moving point revolving around a fixed point. Hence it is இருப்புள்ளிகளின் வினை.

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே?

அளவியல் முதலாய் இடவியல் இயங்கியல்
வடிவவியல் மேலாய் கணித நுண்ணியல்
நேரியல் வரைவியல் யாவைக்கும் வேராய்
நுண்வட்டவியலே குலக்கோட்பாடோ?
அளவியல் – Measurement sciences, இடவியல் – Spatial Geometry or Topological sciences, இயங்கியல் – Science of dynamic and moving bodies, வடிவவியல்- Geometry, கணித நுண்ணியல் – Subatomic sciences, நேரியல் – Linear Algebra, வரைவியல் – Cryptography, வட்டவியலே- Science of Circle, குலக் கோட்பாடு – Common / family factor. Stressing that science of circle is the root of all the above mentioned sciences.

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே?

அண்டமே அணு வடிவமென்று
தொல்லான்மர்கள் ஆழ்ந்துணர்ந்த
அறிவியல் கூற்றை விளக்கும்
வடிவமே உன் வடிவமன்றோ?

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

ஓர் ஆதியும் அந்தமும் இல்லா
அப்பரமனின் அற்புத அழகோ? நீ
ஓர் மூலமும் முடிவும் இல்லா
நல்லாத்மனின் தத்துவ நெறியோ?

வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ

என் அம்மையும் அப்பனும் கண்ட
ஆண்பெண்ணாய் கலந்து நின்ற
இரு பிறையாய்* புணர்ந்து வந்த
உமைநாரிபங்கன் வடிவும் நீயோ?
*A circle is made of 2 half circles and each of them is a Pirai (பிறை)

வட்டத்தின் வடிவை நானும் என்
கைகளால் வரைந்து பார்த்தேன்!
உடல் உள்ளத்தின் நடுக்கம் மேவ
வட்டவடிவும் கோணல் கொள்ள!

கணங்களின் பதியாம் அவனை
வணங்கி ஓர் புள்ளி வைத்தேன்
பூமியின் நற்சுழற்சியால் புள்ளி
வட்ட வடிவும் கொண்டதம்மா!
(A fixed point in a revolving globe would be a circle.)

சித்தத்தின் சீற்றம் தன்னை, இயற்க்கை
சீலத்தில் லயித்தால், வாழ்வில்
விளையுமே செம்மை வட்டம்
என்று நான் கற்றேன் பாடம்!!

பர நாதத்தின் ஒளியும் வட்டம்
நம் ஞாலத்தின் படிவம் வட்டம்
கணக்கியலின் மூலம் வட்டம்
அம்மூலத்தின் வடிவம் வட்டம்

“அ” காரத்தின் தொடக்கம் வட்டம்
“உ” காரத்தின் தொடக்கம் வட்டம்
“ஓ” காரத்தின் தொடக்கம் வட்டம், அவ்
“ஓ” காரத்தின் முடிவும் வட்டம்

இன்பமும் துன்பமும் மீண்டும்
விளைவதே வாழ்க்கை வட்டம்!
பிறப்பதும் இறப்பதும் மீண்டும்
உளைவதே மாயை வட்டம்!!

அண்டத்துள் பிண்டம் என்றும்
பிண்டத்துள் அண்டம் என்றும்
என்னுள்ளத்துள் உறையும் ஈசன்
ஓர் வட்டத்துள் வட்டமன்றோ?

வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் பிரணவம்!!
வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் ஞாலம்!!

வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் வாழ்க்கை!!
தொடக்கமும் முடிவும் இல்லா
வட்டத்தை வந்தனை செய்வேன்!!

தொடக்கமும் முடிவும் இல்லா
வட்டத்தை வந்தனை செய்வேன்!!

 Happy Reading!

Thursday, March 15, 2012

இல்லை, இல்லை, இல்லையே (Neti, Neti)

I think i still have an hangover of the thoughts I had when I blogged the last poem in Tamil on எத்தனை, எத்தனை (http://ragsgopalan.blogspot.in/2012/03/blog-post.html) . May be if you have not read it, please do and come here.

Almost on the same lines I have taken the Neti, Neti concept of the Indian philosophy as understood by me and attempted this. Neti is a concept that negates all that is not truth and that is not permanent and finally arrives at God. Every scripture which talks about the concept of God finally talks that God is without name and form and quality. Seek god within you and the only attributes he seems to possess is Love, Truth and Bliss. You would note that  I would have stuck to order of Tamil alphabets for each and every line.

श्री गुरुब्यो नमः! 

அம்மை இல்லை, அப்பன் இல்லை, அந்தம் அங்கு இல்லையே  
ஆதி இல்லை, ஆசை இல்லை, ஆணவ மாங்கு இல்லையே
இன்பம் இல்லை, இன்னல் இல்லை, இச்சை அங்கு இல்லையே
பின், கோயில் கட்டி கும்பம் நாட்டி வணங்குவதேன் கல்லையே?

ஈரம் இல்லை, ஈகை இல்லை, ஈட்டுவதும் இங்கு இல்லையே
உயிரும் இல்லை, உடலும் இல்லை, உணர்ச்சிகளும் இல்லையே
ஊக்கம் இல்லை, ஊட்டம் இல்லை ஊனும் அங்கு இல்லையே
பின், ஆற்றில் ஆடி, தூயாடைச் சூடி வணங்குவதேன் கல்லையே?

எண்ணும் இல்லை எழுத்தும் இல்லை, எழுச்சி என்பதில்லையே
ஏற்றம் இல்லை, ஏக்கம் இல்லை, ஏமாற்றம் அங்கு இல்லையே
ஐயம் இல்லை, ஐயன் இல்லை, ஐந்தெழுத்தும் இல்லையே
பின், பூவைக்கூட்டி புடவைச் சாற்றி வணங்குவதேன் கல்லையே?  

ஒப்பும் இல்லை,ஒலியும் இல்லை, ஒழுக்கமென்பது இல்லையே
ஓசை இல்லை, ஓட்டம் இல்லை, ஒய்வொன்று இல்லையே
ஔவை பாட்டி தந்த நெறியும் ஔடதமாய் இல்லையே
பின், படையலிட்டு பந்தி வைத்து வணங்குவதேன் கல்லையே?

கள்ளம் இல்லை, கபடும் இல்லை, கல்வி என்றும் இல்லையே
சக்தி இல்லை, சட்டம் இல்லை, சடங்கும் அங்கு இல்லையே,
ஞாலம் என்ற ஞானம் இல்லை, ஓர் ஞாபகமும் இல்லையே
பின், பாலும், தேனும், தயிருமூற்றி வணங்குவதேன் கல்லையே?  

தப்பும் இல்லை, தவறும் இல்லை, தண்டனையும் இல்லையே
நந்தி இல்லை, நஞ்சும் இல்லை, நாதம் அங்கு இல்லையே
பக்தி இல்லை, பண்பு இல்லை, பணிவதும் தான் இல்லையே
பின், தூபம்க்கூட்டி, தீபம் காட்டி வணங்குவதேன் கல்லையே?

மரபும் இல்லை, மாசும் இல்லை, மகிழ்ச்சி என்பதில்லையே 
யமுனை ஆற்றில் நமனை வென்ற யாதவனும் இல்லையே
ரவி குலத்தில் ரகு விழியில் வந்த ராகவனும் இல்லையே 
பின், ஊரூராய் நாடி, ஓடி ஆடி வணங்குவதேன் கல்லையே?

லகுவும் இல்லை குருவும் இல்லை, லாவகமும் இல்லையே   
வடிவம் இல்லை, வரையும் இல்லை, விசும்பும் அங்கு இல்லையே 
அயனும் இல்லை, ஹரியும் இல்லை ஹரனும் அங்கு இல்லையே 
அது அறிவொளியாய் ஆனந்தமாக இருப்பதுதான் உண்மையே !

 Happy reading!

Tuesday, March 13, 2012

எத்தனை, எத்தனை

I was in one of those moods of being averse to anything that was to be done as a formality, tradition etc. It was a rationalistic view and wanted to take on the multiplicity of religion, caste, creed, temples, tradition, rituals etc. In this attempt I argue that what is the use of all these temples, rituals, tradition, books, mantras when it lacks love and compassion. When it is a ritual for a sake of maintaining continuity of tradition, it has lost its significance. Castigating the extent of loss in rituals in temples like milk, honey, ghee, flowers and the sacrifices that are given, i am suggesting seek god within you. Backed by the saying that you cannot reach god through words, deeds, by birth etc, i am emphasizing that we have to search god within us. When we don't internalize this as love and seek god within ourselves, everything is a wastage of energy.

I was inspired by the following lines of Siddhar Sivavakiyar and attempted this. I agree that there is no comparison on the depth of the meaning and the sweetness of the words, yet a bold attempt.

"பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை   
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை" 

________

எத்தனை,  எத்தனை
ஜாதிகளும்  எத்தனை வாதிகளும் எத்தனை
மதங்களும் எத்தனை, மடங்களும் எத்தனை
ஜாதி என்றும், மதம் என்றும் பிரிவுகள் எத்தனை 
நாடு மொழி இனங்கள் என்று பிரிவினை எத்தனை  

எத்தனை,  எத்தனை
ரிக் என்றும், யஜுர் என்றும் வேதங்கள் எத்தனை
அயன் என்றும், ஹரி என்றும் தெய்வங்கள் எத்தனை 
சிவ, சங்கர, ஹரன் என்று நாமங்கள் எத்தனை
கட, ஈச, முண்டகம் வேதாந்தங்கள் எத்தனை

எத்தனை, எத்தனை 
மொட்டாக நன்மலர்கள் கொய்ததும் தான் எத்தனை
பட்டாக சிறு பூச்சிகளை படுத்ததும் தான் எத்தனை 
எட்டாக இரண்டாக கண்ணில் உட்கலந்த நாதனை 
மெட்டாக பண் எடுத்து நீ தேடுவதும் வேதனை

எத்தனை, எத்தனை 
வெட்டாத ஆற்றிலே நீர் இறைத்ததும் தான் எத்தனை
ஜெபித்த கோடி மந்திரங்கள் மறைந்ததும் தான் எத்தனை
எட்டாத ஏகனை, கருங் கல்லில் கொண்டு ஏற்றவே
கற்காத கற்றவர்கள் இம்மண்ணிலும் தான் எத்தனை

எத்தனை, எத்தனை 
கறந்திட்ட ஆவின் பால் வீண் அடித்ததும் தான் எத்தனை
பலியிட்ட ஆவு, மாவும், கோழி உயிரினங்கள் எத்தனை
பறந்திட்ட தீப்பொறிகள் உண்ட நெய்யும் அவிசும் எத்தனை
மறந்திட்ட உண்மையொன்று அதுவன்றோ பேர் வேதனை

எத்தனை, எத்தனை
மெய்ப்பொருளை விளக்கவே தோத்திரங்கள் எத்தனை 
மெய்ப்பொருளை  விளக்கவே மந்திரங்கள் எத்தனை
மெய்ப்பொருளை  விளக்கவே கீர்த்தனைகள் எத்தனை
மெய்ப்பொருளை  விளக்கவே புத்தகங்கள் எத்தனை

எத்தனை, எத்தனை
மெய்ப்பொருளை மறைக்கவே கோயில்களும் எத்தனை 
மெய்ப்பொருளை மறைக்கவே மசூதிகளும் எத்தனை
மெய்ப்பொருளை மறைக்கவே தேவாலயங்கள் எத்தனை
மெய்ப்பொருளும் மறைபொருளாய் மாறியது வேதனை  

எத்தனை, எத்தனை
இலக்கணங்கள்  எத்தனை, இலக்கியங்கள்  எத்தனை
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டும் விரதங்களும் எத்தனை
கருமுதலாய் காடுவரை மதக் கடமைகளும் எத்தனை
மனதை மட்டும் கட்டவில்லை இம்மடத்தனமே வேதனை

எத்தனை, எத்தனை
வறுமையால் வாடிய உயிர்களும் தான் எத்தனை
பசியினால் பிணியினால் மாண்டவர்கள் எத்தனை
அன்புமில்லா, அறிவுமில்லா, அறமுமில்லா பழமையை
இந்நொடி முதலே உறுதியாக செய்திடுவோம் நிந்தனை !! 

அன்பெனும் வேலினால் மாய்ப்பினை தீவினை
காமனை நிந்தனை செய்தலே நல்வினை
மாயையை மாய்த்தவன் மாறனை, மாயனை
வாசியின் வேந்தனை சிந்தனை செய்தனை 

ராமனை, கண்ணனை, கோ விந்தனை, நந்தனை
கண்ணிமை உள்ளிலே பேரொளியாய் எண்ணினை
நம்கண்ணிலே கந்தனை செய்குவோம் வந்தனை
அகவிண்ணிலே ஈசனை செய்குவோம் பூசனை !!


Happy reading!

Saturday, February 18, 2012

அன்பும் ஆண்டவனும் (LOVE AND GOD)

I was reading “God” by Kahlil Gibran, which was part of "The Madman", which is reproduced here.

God by Kahlil Gibran

In the ancient days, when the first quiver of speech came to my lips, I ascended the holy mountain and spoke unto God, saying, 'Master, I am thy slave. Thy hidden will is my law and I shall obey thee for ever more.'

But God made no answer, and like a mighty tempest passed away.

And after a thousand years I ascended the holy mountain and again spoke unto God, saying, 'Creator, I am thy creation. Out of clay hast thou fashioned me and to thee I owe mine all.'

And God made no answer, but like a thousand swift wings passed away.

And after a thousand years I climbed the holy mountain and spoke unto God again, saying, 'Father, I am thy son. In pity and love thou hast given me birth, and through love and worship I shall inherit thy kingdom.'

And God made no answer, and like the mist that veils the distant hills he passed away.

And after a thousand years I climbed the sacred mountain and again spoke unto God, saying, 'My God, my aim and my fulfillment; I am thy yesterday and thou art my tomorrow. I am thy root in the earth and thou art my flower in the sky, and together we grow before the face of the sun.'

Then God leaned over me and in my ears whispered words of sweetness, and even as the sea that enfoldeth a brook that runneth down to her, he enfolded me.

And when I descended to the valleys and the plains, God was there also.
The following attempt in Tamil poetry is a product of inspiration from Kahlil Gibran (Of course conceptually it takes a different line). While we are trying to approach god through various means - rituals, yoga and what not, the poem stresses that Love is God in simple Tamil and you may like reading this.


கடவுளை நானும் காண 
கரியவனின் கருணைப் பேண
ஆற்றிலே  நீராடல் செய்து 
நன்மலர்கள் பதமாய்க் கொய்து 
தூயாடையும் மடியாய்ச் சூடி 
மும்முறை சந்தி ஆடி 
பூஜையும் யாகமும் கண்ட
படைத்த நல்லவிர்பாகம் கொண்ட
யாகத்தின் தலைவன் நின்னை 
நாடினேன் நலம்செய் என்னை!
 
பூஜையில் மகிழ்ச்சிக் கொண்டு
பரமனும் வந்தான் முன்பு 

அக்னி பிழம்பாய் நின்ற
அண்ணலும் என்னைக் கண்டு 
காந்தமின் பார்வைக் கொண்டு 
புன்முறுவலும் பூத்தே நன்று
வார்த்தையும் மொழியாமல் ஒன்று
என்னையும் கடந்தான் சென்று! 

கடவுளை நானும் காண 
கரியவனின் கருணைப் பேண
யோகமும் நீயே என்று 
சிரசிலே நின்றேன் நன்று 
முதுகுத் தண்டினை நட்டி
மூச்சினை நன்குக் கட்டி 

நாசியில் உன்னைக் காண
வாடினேன் நின்னைப் பேண
ஆதலால் அடியேன் நின்னை 
வாசியென ஏற்றுவேனே
வாலையின் பதியே உன்னை
நாடினேன் நலம்செய் என்னை!
 
யோகத்தில் மகிழ்ச்சிக் கொண்டு
பூரணனும் வந்தான் முன்பு

நிர்மல வடிவாய் நின்ற
முதல்யோகியும்  என்னைக் கண்டு 
காந்தமின் பார்வைக் கொண்டு 
புன்முறுவலும் பூத்தே நன்று
வார்த்தையும் மொழியாமல் ஒன்று
என்னையும் கடந்தான் சென்று! 

ஓமெனும் மெய்ப்பொருளும் நீயே
ஒமுறை மறைப்பொருளும் நீயே
நான்மறை முதற்ப்பொருளும்  நீயே 
நான்மறை மேற்ப்பொருளும் நீயே
நான்மறை கருப்பொருளும் நீயே 
நான்மறை இறைப்பொருளும் நீயே 
ஆதலால் அடியேன் நின்னை 
அப்பிரணவமென ஏற்றுவேனே
நாதத்தின் நாதன் உன்னை
நாடினேன் நலம்செய் என்னை!
 
மோனத்தில் மகிழ்ச்சிக் கொண்டு
என் நாயகனே வந்தான் முன்பு 

நாதத்தின் வடிவாய் நின்ற
நாதனும்  என்னைக் கண்டு 
காந்தமின் பார்வைக் கொண்டு 
புன்முறுவலும் பூத்தே நன்று
வார்த்தையும் மொழியாமல் ஒன்று
என்னையும் கடந்தான் சென்று! 

அன்பிற் பிறியதொன்றில்லை
அன்பிற் பெரியதொன்றில்லை
அன்பினால் இழிவொன்றில்லை
அன்பினால் அழிவே இல்லை 

அன்பையே அம்பாய்க் கொண்டு
அன்பனை அடிமைக் கொள்வேன்  
கருணையை வாளாய்க் கொண்டு
கரியவனின் கருத்தை வெல்வேன்   

ஆதலால் அடியேன் நின்னை 
அன்பே சிவமென ஏற்றுவேனே
அன்பற்கு அடியவன் உன்னை
நாடினேன் அணைப்பாய் என்னை!
 
அன்பனும் அன்பு கொண்டு எனை
அணைக்கவே வந்தான் முன்பு 

கருணையின் வடிவாய் நின்ற
கரியவனும் என்னைக் கண்டு 
காந்தமின் பார்வைக் கொண்டு 
புன்முறுவலும் பூத்தே நன்று

அணைத்தனன் ஆவல் கொண்டு
ஆத்மனும் பகர்ந்தான் ஒன்று
அன்பென்னும் அறிவைக் கொண்டு 
எனை நீயும் அறிந்தாய் நன்று

அன்பும் உன் என்பில் தோய 
அன்பிலே உன் மனமதி ஓய
அன்பின் நான் வேறு அன்றே 
அன்பிலே நாம் கலந்தோம் இன்றே! 



Happy Reading!