Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Thursday, March 15, 2012

இல்லை, இல்லை, இல்லையே (Neti, Neti)

I think i still have an hangover of the thoughts I had when I blogged the last poem in Tamil on எத்தனை, எத்தனை (http://ragsgopalan.blogspot.in/2012/03/blog-post.html) . May be if you have not read it, please do and come here.

Almost on the same lines I have taken the Neti, Neti concept of the Indian philosophy as understood by me and attempted this. Neti is a concept that negates all that is not truth and that is not permanent and finally arrives at God. Every scripture which talks about the concept of God finally talks that God is without name and form and quality. Seek god within you and the only attributes he seems to possess is Love, Truth and Bliss. You would note that  I would have stuck to order of Tamil alphabets for each and every line.

श्री गुरुब्यो नमः! 

அம்மை இல்லை, அப்பன் இல்லை, அந்தம் அங்கு இல்லையே  
ஆதி இல்லை, ஆசை இல்லை, ஆணவ மாங்கு இல்லையே
இன்பம் இல்லை, இன்னல் இல்லை, இச்சை அங்கு இல்லையே
பின், கோயில் கட்டி கும்பம் நாட்டி வணங்குவதேன் கல்லையே?

ஈரம் இல்லை, ஈகை இல்லை, ஈட்டுவதும் இங்கு இல்லையே
உயிரும் இல்லை, உடலும் இல்லை, உணர்ச்சிகளும் இல்லையே
ஊக்கம் இல்லை, ஊட்டம் இல்லை ஊனும் அங்கு இல்லையே
பின், ஆற்றில் ஆடி, தூயாடைச் சூடி வணங்குவதேன் கல்லையே?

எண்ணும் இல்லை எழுத்தும் இல்லை, எழுச்சி என்பதில்லையே
ஏற்றம் இல்லை, ஏக்கம் இல்லை, ஏமாற்றம் அங்கு இல்லையே
ஐயம் இல்லை, ஐயன் இல்லை, ஐந்தெழுத்தும் இல்லையே
பின், பூவைக்கூட்டி புடவைச் சாற்றி வணங்குவதேன் கல்லையே?  

ஒப்பும் இல்லை,ஒலியும் இல்லை, ஒழுக்கமென்பது இல்லையே
ஓசை இல்லை, ஓட்டம் இல்லை, ஒய்வொன்று இல்லையே
ஔவை பாட்டி தந்த நெறியும் ஔடதமாய் இல்லையே
பின், படையலிட்டு பந்தி வைத்து வணங்குவதேன் கல்லையே?

கள்ளம் இல்லை, கபடும் இல்லை, கல்வி என்றும் இல்லையே
சக்தி இல்லை, சட்டம் இல்லை, சடங்கும் அங்கு இல்லையே,
ஞாலம் என்ற ஞானம் இல்லை, ஓர் ஞாபகமும் இல்லையே
பின், பாலும், தேனும், தயிருமூற்றி வணங்குவதேன் கல்லையே?  

தப்பும் இல்லை, தவறும் இல்லை, தண்டனையும் இல்லையே
நந்தி இல்லை, நஞ்சும் இல்லை, நாதம் அங்கு இல்லையே
பக்தி இல்லை, பண்பு இல்லை, பணிவதும் தான் இல்லையே
பின், தூபம்க்கூட்டி, தீபம் காட்டி வணங்குவதேன் கல்லையே?

மரபும் இல்லை, மாசும் இல்லை, மகிழ்ச்சி என்பதில்லையே 
யமுனை ஆற்றில் நமனை வென்ற யாதவனும் இல்லையே
ரவி குலத்தில் ரகு விழியில் வந்த ராகவனும் இல்லையே 
பின், ஊரூராய் நாடி, ஓடி ஆடி வணங்குவதேன் கல்லையே?

லகுவும் இல்லை குருவும் இல்லை, லாவகமும் இல்லையே   
வடிவம் இல்லை, வரையும் இல்லை, விசும்பும் அங்கு இல்லையே 
அயனும் இல்லை, ஹரியும் இல்லை ஹரனும் அங்கு இல்லையே 
அது அறிவொளியாய் ஆனந்தமாக இருப்பதுதான் உண்மையே !

 Happy reading!

2 comments:

  1. Not good. - Not this. Not this !

    ReplyDelete
  2. Superb. There is one `Nirvaana Shadgam' by Aadhi Sankaracharya. The above verses, give near about the same meaning. I dont know, whether you are already aware of the same. Pl. do go through the same, if not already known. Regards.

    ReplyDelete