Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Tuesday, March 13, 2012

எத்தனை, எத்தனை

I was in one of those moods of being averse to anything that was to be done as a formality, tradition etc. It was a rationalistic view and wanted to take on the multiplicity of religion, caste, creed, temples, tradition, rituals etc. In this attempt I argue that what is the use of all these temples, rituals, tradition, books, mantras when it lacks love and compassion. When it is a ritual for a sake of maintaining continuity of tradition, it has lost its significance. Castigating the extent of loss in rituals in temples like milk, honey, ghee, flowers and the sacrifices that are given, i am suggesting seek god within you. Backed by the saying that you cannot reach god through words, deeds, by birth etc, i am emphasizing that we have to search god within us. When we don't internalize this as love and seek god within ourselves, everything is a wastage of energy.

I was inspired by the following lines of Siddhar Sivavakiyar and attempted this. I agree that there is no comparison on the depth of the meaning and the sweetness of the words, yet a bold attempt.

"பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை   
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை" 

________

எத்தனை,  எத்தனை
ஜாதிகளும்  எத்தனை வாதிகளும் எத்தனை
மதங்களும் எத்தனை, மடங்களும் எத்தனை
ஜாதி என்றும், மதம் என்றும் பிரிவுகள் எத்தனை 
நாடு மொழி இனங்கள் என்று பிரிவினை எத்தனை  

எத்தனை,  எத்தனை
ரிக் என்றும், யஜுர் என்றும் வேதங்கள் எத்தனை
அயன் என்றும், ஹரி என்றும் தெய்வங்கள் எத்தனை 
சிவ, சங்கர, ஹரன் என்று நாமங்கள் எத்தனை
கட, ஈச, முண்டகம் வேதாந்தங்கள் எத்தனை

எத்தனை, எத்தனை 
மொட்டாக நன்மலர்கள் கொய்ததும் தான் எத்தனை
பட்டாக சிறு பூச்சிகளை படுத்ததும் தான் எத்தனை 
எட்டாக இரண்டாக கண்ணில் உட்கலந்த நாதனை 
மெட்டாக பண் எடுத்து நீ தேடுவதும் வேதனை

எத்தனை, எத்தனை 
வெட்டாத ஆற்றிலே நீர் இறைத்ததும் தான் எத்தனை
ஜெபித்த கோடி மந்திரங்கள் மறைந்ததும் தான் எத்தனை
எட்டாத ஏகனை, கருங் கல்லில் கொண்டு ஏற்றவே
கற்காத கற்றவர்கள் இம்மண்ணிலும் தான் எத்தனை

எத்தனை, எத்தனை 
கறந்திட்ட ஆவின் பால் வீண் அடித்ததும் தான் எத்தனை
பலியிட்ட ஆவு, மாவும், கோழி உயிரினங்கள் எத்தனை
பறந்திட்ட தீப்பொறிகள் உண்ட நெய்யும் அவிசும் எத்தனை
மறந்திட்ட உண்மையொன்று அதுவன்றோ பேர் வேதனை

எத்தனை, எத்தனை
மெய்ப்பொருளை விளக்கவே தோத்திரங்கள் எத்தனை 
மெய்ப்பொருளை  விளக்கவே மந்திரங்கள் எத்தனை
மெய்ப்பொருளை  விளக்கவே கீர்த்தனைகள் எத்தனை
மெய்ப்பொருளை  விளக்கவே புத்தகங்கள் எத்தனை

எத்தனை, எத்தனை
மெய்ப்பொருளை மறைக்கவே கோயில்களும் எத்தனை 
மெய்ப்பொருளை மறைக்கவே மசூதிகளும் எத்தனை
மெய்ப்பொருளை மறைக்கவே தேவாலயங்கள் எத்தனை
மெய்ப்பொருளும் மறைபொருளாய் மாறியது வேதனை  

எத்தனை, எத்தனை
இலக்கணங்கள்  எத்தனை, இலக்கியங்கள்  எத்தனை
வாயைக்கட்டி வயிற்றைக்கட்டும் விரதங்களும் எத்தனை
கருமுதலாய் காடுவரை மதக் கடமைகளும் எத்தனை
மனதை மட்டும் கட்டவில்லை இம்மடத்தனமே வேதனை

எத்தனை, எத்தனை
வறுமையால் வாடிய உயிர்களும் தான் எத்தனை
பசியினால் பிணியினால் மாண்டவர்கள் எத்தனை
அன்புமில்லா, அறிவுமில்லா, அறமுமில்லா பழமையை
இந்நொடி முதலே உறுதியாக செய்திடுவோம் நிந்தனை !! 

அன்பெனும் வேலினால் மாய்ப்பினை தீவினை
காமனை நிந்தனை செய்தலே நல்வினை
மாயையை மாய்த்தவன் மாறனை, மாயனை
வாசியின் வேந்தனை சிந்தனை செய்தனை 

ராமனை, கண்ணனை, கோ விந்தனை, நந்தனை
கண்ணிமை உள்ளிலே பேரொளியாய் எண்ணினை
நம்கண்ணிலே கந்தனை செய்குவோம் வந்தனை
அகவிண்ணிலே ஈசனை செய்குவோம் பூசனை !!


Happy reading!

2 comments:

  1. This is not super, but simply `SUPERB'. May I invite your good-self, to view `Universal Cause' blog, and also `Mahaperiavah' & Vedha/Vedha Related Activities Groups of FB, and express willingness to join, if interested, pl. Most happy and a warm welcome again.

    ReplyDelete
  2. Ethanai, Ethanai Kanngal - Ethanai Ethanai Sindhanai.

    Nice

    ReplyDelete