அதோ பார்!
வானத்தில் வானவில்!எவ்வளவு அழகு,
எவ்வளவு இனிமை
என்றது ஒரு கூட்டம்
வானத்தின் பெருமையை
பாடியது ஒரு கூட்டம்
மழையின் அழகை
பாராட்டியது ஒரு கூட்டம்
எல்லாம் ஆமோதித்தது
மற்றோருக் கூட்டம்
அதைக் கண்ட ஒரு துறவி கூறினார்:
மடையர்களே!!
வானத்தில் இல்லை வானவில், அது
உங்கள் கண்களில் இருக்கிறது! அந்த
வாயை பிளந்து வானையே
பார்ப்பதை நீ நிறுத்தியே!!
ஊனைக் கடந்து உயிரிலே
உற்று நோக்க வல்லீரேல் அந்த
நீலவானம் உன் கண்ணுள்ளே, அந்த
கரியமேகம் உன் கண்ணுள்ளே,அந்த
வளைந்த வடிவம் கண்ணுள்ளே, அந்த
ஏழுவர்ணம் உன் கண்ணுள்ளே,
ஐம்புலனின் ஓட்டம் நிறுத்தியே
கருத்தை கொஞ்சம் திருத்தியே, அந்த
நோக்கம் இல்லா நோக்கிலே அந்த
பார்வை இல்லா பார்வையில்
ஏழு வர்ணம் தெரிந்திடும், அந்த
வானவில்லும் மலர்ந்திடும்!
Happy reading!
No comments:
Post a Comment