I blogged this as Guru Vandanam on the Occasion of my birthday this month.
ஆடும் மனமும் அலைகடல் துரும்பாய்
தேடும் பொருளே சதமென எண்ணி
ஏடும் அறிவும் அறியா என்னை
ஓடும் இன்பம் சிறு பணித் தேடி
வாடும் என்னை கருணை மேவி
மேடும் மடுவும் வாழ்க்கைப் பயணம்
காடும் மலையும் திரியவும் வேண்டாம்
கோடும் கோளும் பிறவி வினையை
சாடும் அருளே குருவின் நயணம்
வீடும் உறவும் மூவிறு ஆறாய் (36)
ஈடும் இனணயிலா அன்பர் கூட்டில்
கூடும் கருனண என்னனென சொல்வேன்
நீடும் வாழ்வில் நிம்மதி ஈந்து
கேடும் பிணியும் எனை விட்டோட
கூடும் உயிரும் குலவும் பொழுதே
நாடும் நலமும் சிவமே கொள்ளென
தேடும் சிவநெறி நன்மதிக் கூட்டி
பாடும் திறனும் பாங்காயருளி
ஆடும் சட்டை முனியின் நடனம்
பீடும் விலக்கி நம்மை வீடு சேர்க்குமே!
No comments:
Post a Comment