I read this English poem in a social forum and was very inspired. I scribbled the Tamil poem below which isn't a translation but reflects some of the concepts with some improvisation. Hope you like it :).
A poem inspired by the zen calligraphy ichi en so by shingai tanaka.
Where does the circle begin?
Is it a line you guess with your pen?
Is the passage of time
just a spin of a dime
along crooked line
to a finishing sign?
If you go on and on
feeling lost, feeling numb,
will you find what you want
in this meaningless hunt?
Where does the circle begin?
Is it the distance you run from your sin?
Is your knowledge of past
what sustains you to last,
what you've seen,
what you've done,
under moon
under sun?
If you keep looking back
on your life in the black
will you see what you want
in this meaningless hunt?
Where does the circle begin?
Is it the distance you mark from a pin?
If you run round the edge
on the cusp of the ledge
searching bush, searching hedge
in the seas that you dredge
if you look for the one
under heaven and sun
will you find what you want
in this meaningless hunt?
Where does the circle begin?
Can you trace another thats been?
If you copy your father,
your mother,
your brother
will you find your true self
or will you still suffer?
Is there a template for you
to know what is true?
Can you find what you want
in this meaningless hunt?
Where does the circle begin?
I'll tell you, I've seen it, I've been!
It is born in the sound of the voice of the ground
and the moon and the stars
and the sky that is ours
and the compulsion to ask!
And though I stand on the sand
With my heart in my hand
I can hear there's a sound
In the darkness I found
For there is infinite possibility
In the depths of my limits, see
From a seed grows a tall tree
And the knowledge we're born free!
And in the sound that I found
In the voice of the ground.
And the resonant art
Of my hand and my heart
Where does the circle begin?
Its easy, its drawn from within!
-----------
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
ஓர் விட்டத்தின் சுற்றும் வடிவோ? நீ
ஓர் புள்ளியின் எண்ண வரையோ? நீ
ஓர் ஆரையின் அளவு அசைவோ? நீ
ஓர் பரிதியின் முழுமை அளவோ?
(விட்டம் = Diameter, ஆரை = Radius,
பரிதி =
Circumference)
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
ஓர் மையத்தில் நங்கூரம் கொண்ட
நேர்கோட்டின் சுழன்ற பாங்கோ?
ஓர் கூர்முனையே இல்லா நீயும்
எம்முனைக்கும் வடிவ வியலோ?
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
மூலத்தின் முழுமுதற் பொட்டோ?
காலத்தின் பொற்கோலம் நீயோ? நீ
சீலத்தின் நற்செம்மை வடிவோ? நீ
ஞாலத்தின் ஞானப் பொழிவோ?
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
ஓர் விதியின் விளையா வித்தோ? நீ
ஓர் வித்தில் விளையும்
வினையோ?
வளைவயே இலக்கணமாய் கொண்ட
இருப்புள்ளிகளின் வினையும் நீயோ?
A circle is a moving point revolving around a fixed point. Hence it is இருப்புள்ளிகளின் வினை.
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே?
அளவியல் முதலாய் இடவியல் இயங்கியல்
வடிவவியல் மேலாய் கணித நுண்ணியல்
நேரியல் வரைவியல் யாவைக்கும் வேராய்
நுண்வட்டவியலே குலக்கோட்பாடோ?
அளவியல்
– Measurement sciences, இடவியல் –
Spatial Geometry or Topological sciences, இயங்கியல் –
Science of dynamic and moving bodies, வடிவவியல்- Geometry, கணித நுண்ணியல் –
Subatomic sciences, நேரியல் – Linear Algebra, வரைவியல் –
Cryptography, வட்டவியலே-
Science of Circle, குலக்
கோட்பாடு – Common / family factor. Stressing that science of circle
is the root of all the above mentioned sciences.
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே?
அண்டமே அணு வடிவமென்று
தொல்லான்மர்கள் ஆழ்ந்துணர்ந்த
அறிவியல் கூற்றை விளக்கும்
வடிவமே உன் வடிவமன்றோ?
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
ஓர் ஆதியும் அந்தமும் இல்லா
அப்பரமனின் அற்புத அழகோ? நீ
ஓர் மூலமும் முடிவும் இல்லா
நல்லாத்மனின் தத்துவ நெறியோ?
வட்டமே உன் தொடக்கம் எங்கே?
வட்டமே உன் முடிவும் எங்கே? நீ
என் அம்மையும் அப்பனும் கண்ட
ஆண்பெண்ணாய் கலந்து நின்ற
இரு பிறையாய்* புணர்ந்து வந்த
உமைநாரிபங்கன் வடிவும் நீயோ?
*A circle is made of 2 half circles and each of them is a
Pirai (பிறை)
வட்டத்தின் வடிவை நானும் என்
கைகளால் வரைந்து பார்த்தேன்!
உடல் உள்ளத்தின் நடுக்கம் மேவ
வட்டவடிவும் கோணல் கொள்ள!
கணங்களின் பதியாம் அவனை
வணங்கி ஓர் புள்ளி வைத்தேன்
பூமியின் நற்சுழற்சியால் புள்ளி
வட்ட வடிவும் கொண்டதம்மா!
(A fixed point in a revolving globe would be a circle.)
சித்தத்தின் சீற்றம் தன்னை, இயற்க்கை
சீலத்தில் லயித்தால், வாழ்வில்
விளையுமே செம்மை வட்டம்
என்று நான் கற்றேன் பாடம்!!
பர நாதத்தின் ஒளியும் வட்டம்
நம் ஞாலத்தின் படிவம் வட்டம்
கணக்கியலின் மூலம் வட்டம்
அம்மூலத்தின் வடிவம் வட்டம்
“அ” காரத்தின் தொடக்கம் வட்டம்
“உ” காரத்தின் தொடக்கம் வட்டம்
“ஓ” காரத்தின் தொடக்கம் வட்டம், அவ்
“ஓ” காரத்தின் முடிவும் வட்டம்
இன்பமும் துன்பமும் மீண்டும்
விளைவதே வாழ்க்கை வட்டம்!
பிறப்பதும் இறப்பதும் மீண்டும்
உளைவதே மாயை வட்டம்!!
அண்டத்துள் பிண்டம் என்றும்
பிண்டத்துள் அண்டம் என்றும்
என்னுள்ளத்துள் உறையும் ஈசன்
ஓர் வட்டத்துள் வட்டமன்றோ?
வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் பிரணவம்!!
வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் ஞாலம்!!
வட்டத்தில் தொடங்கி மீண்டும்
வட்டத்தில் முடியும் வாழ்க்கை!!
தொடக்கமும் முடிவும் இல்லா
வட்டத்தை வந்தனை செய்வேன்!!
தொடக்கமும் முடிவும் இல்லா
வட்டத்தை வந்தனை செய்வேன்!!
Happy Reading!