Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Monday, September 27, 2021

நான்கொண்ட அன்பிலே சிக்கியதும் ஓர் அற்புதமே!

 This is a song I scribbled pretty quickly... I could not build up on this. So this is Othhai Paatu...(ஒத்தபாட்டு)


மான்கொண்ட மலைமகள் மணாளன் மண்ணுயிராய் என்

ஊன்கொண்ட மும்மலமாய் முக்குணமாய் செரிந்ததும் ஏன்? அன்று

கூன்கொண்ட பேரிளம்பெண் பிட்டுக்கு‌ மொத்துண்டழகன்

நான்கொண்ட அன்பிலே சிக்கியதும் ஓர் அற்புதமே! 


Happy Reading!

வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்!

 Musings: வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்


 சந்தை யாம் இவ்வுலகில், சத்தியத்தை நாடியே

நிந்தை யதை செய்யாமல் அரவிந்தமதை பாடியே

சிந்தை வழி ஏகாமல் சிவன் வழி ஏகியே

வந்த வழி நோக்காமல்‌ வாரா வழி நோக்குமின்!!

நாடும் நலமும் சிவமே கொள்!

I blogged this as Guru Vandanam on the Occasion of my birthday this month. 


ஆடும் மனமும் அலைகடல் துரும்பாய்

தேடும் பொருளே சதமென எண்ணி

ஏடும் அறிவும் அறியா என்னை

ஓடும் இன்பம் சிறு பணித் தேடி


வாடும் என்னை கருணை மேவி

மேடும் மடுவும் வாழ்க்கைப் பயணம்

காடும் மலையும் திரியவும் வேண்டாம்

கோடும் கோளும் பிறவி வினையை


சாடும் அருளே குருவின்  நயணம்

வீடும் உறவும் மூவிறு ஆறாய் (36)

ஈடும் இனணயிலா அன்பர் கூட்டில்

கூடும் கருனண என்னனென சொல்வேன்


நீடும் வாழ்வில் நிம்மதி ஈந்து

கேடும் பிணியும் எனை விட்டோட

கூடும் உயிரும் குலவும் பொழுதே

நாடும் நலமும் சிவமே கொள்ளென


தேடும் சிவநெறி நன்மதிக் கூட்டி

பாடும் திறனும் பாங்காயருளி

ஆடும் சட்டை முனியின் நடனம் 

பீடும் விலக்கி நம்மை வீடு சேர்க்குமே!

Happy birthday Namo!

 I scribbled this in Twitter on the occasion of the birthday of our beloved PM Narendra Modi.


வாடி வதங்கும் ஏழைகளின்

வருத்தம்‌ தணித்து துயரோட்டி

வீடும் அளித்து விளக்கேற்றி

ஆயுஷ்மானால் பிணியகற்றி


வங்கி கணக்கு இல்லாத

வறியவர்களும் வாழ்த்திடவே

ஜனதான் கொடுத்தான் வளம் கொடுத்தான்

மோடி என்னும் மாமனிதன்.


வஞ்சக் கருவால் உருவாகி

நஞ்மொன்றே உணவாக்கி

பஞ்சப் பட்டினி பிணியெல்லாம்

துஞ்சும் நாட்டில் தனதாக்கி


அண்டை நாடாம் பாக்கிஸ்தான்

அடங்கா ஆட்டம் அடிக்கிட்டான்

மண்டை ஓட்டில் ஒரு குட்டும்

பாலாகோட்டில் ஒரு தட்டும்


பண்டை பாரதம் மீண்டுவர

பாரார் எல்லாம்‌ போற்றிவிட

திருடர்கள் எல்லாம் கூடியழ

வீரம் கொடுத்தான்‌ செருக்குரைத்தான். 


May God bless him healthy and long life so that he can continue to serve us for many more years.


 

I am back!

Hola Everyone!


Logging in after a long time. I am surprised to see so many comments in the website which were not published and waiting for moderation. I just approved and published them all.


Also quite a number of people wanted to reach out or talk to me on few blogs that they found interesting. I request please reach out through the email ID listed in my profile.

Thanks again to everyone..

I don't know if I can blog again periodically but would make every attempt to do it.


Best Regards

Rags Gopalan