Just another attempt... Dedicated to thousands of Jawans, CRPF, Policemen who sacrifice their life for the sake of the country and our welfare. I scribbled this yesterday on a flight between Bangalore and Mumbai. I am not sure how can we repay their service!
உயிராலே உனக்கு அன்பூட்டி!
குருதியை அமுதாக்கி உன் ஊனிலே
இதயத்தால் நான் ஊட்டி!
வீரத்துடன் மானம் அறம் அன்பும்
உன் என்புடன் உரம் சேர்த்தே!
நற்சீலத்துடன் வளர்த்த உன்
தேகமும் இன்று அழிந்ததுவோ?
காலத்தே நீ பயின்ற மறை
ஞானமும் கல்வியும் அறிவியலும்
ஞாலத்தே நீ வென்ற நிறை
போர்களும் வில்வாட் போட்டிகளும்
மோனத்தே நீ நயந்த பர
நாதமும், அருள் இறைக் காட்சிகளும்
ஓலத்தே நான் வாட, குரு தந்தையின்
தவம் உனைக் காக்கிலையோ?
பாய்ந்து வரும் கொடும்புலியை இடக்கையாலே,
மேலும் சீறி வரும் விஷப் பாம்பை வலக்கையாலே!
மோத வரும் மதயானை மின் பார்வையினாலே
அடக்கிய அப்பேரழகை இனி எங்கு காண்பேன்?
திணவெடுத்த பெருந்தோளை அருள் விழியை
மலைதிடத்தை மிகுந்த உன் மார்பகத்தை
பலர் கூடி எதிர்தனரோ? ஓர் வலிமையில்லா
பல கோழைகளும் மறைந்து போர் தொடுத்தனரோ?
காயாகி கனியாகி பின்பு
வெம்பியே வீழ்ந்திடாமல்!
நோயிலே உழன்று நீயும்
நரைக் கூடி மாயந்திடாமல்!
பாயிலே கிடந்து கைகால்கள்
வீங்கித் தோய்ந்திடாமல்!
கனியனாய் போரில் காய்ந்தாய்
நின் வீரத்தை வாழ்துவேனே!
Happy Reading!