Recently i saw movie called 7aam Arivu (ஏழாம் அறிவு) and the key concept of the movie is around Bodhidharma and his teachings to Chinese esp. Nokku Varmam. Nokku varmam is a branch of the martial arts where you can subdue an opponent without any contact by using the energy from your eyes. It is really sad that these arts are almost dead in the main land and is probably flourishing in places where it is adopted some time back.
Our ability to neglect our rich past is shocking and also very saddening. When you see such a powerful subject as a movie you can't escape getting inspired by it. This art is given to us by Sage Agasthiyar who lived in south India and is the head of Sidha parampara. He was married to a lady called Lopamudra and he lived in South India in Sanga Kalam. You can google to find out more about him.
This blog is about i saying that Nokku Varmam - the art of managing energy through our eyes is very much alive in Tamil Nadu and you may enjoy if you can read Tamil. I am attributing this art to his wife, that the sage has learnt this from his wife's eyes and given it to us. I am suggesting that the art which is used to kill or control an opponent is refined to fit our culture of non-violence (கொல்லாமை, இன்னா செய்யாமை) and we have preserved this in a better form. Hope you would like it.
ஆழிசூழ் அண்டத்தில் நல்லமிழ்து பொங்கும் தமிழகம்
ஊழிசூழ் அழிவிலும் நற்பெருமை நீங்கா நானிலம்
நாழியும் சங்கமாம் நன்னிலம் தென்பொதிகையாம்
வாழவே ஞாலமும் வந்தானே அகத்தியனும்!
சாஸ்திரமும் சூத்திரமும் சித்தியும் யோகமும்
லோபமுத்ரை வழியாலே இல்லறத்தின் போகமும்
இலக்கணமும் மருத்துவமும் கரைகண்ட தாயச்சித்தன்
வர்மமென்ற உயர் கலைக்கு குருமுனியும் உயிர் கொடுத்தான்!
விந்தியனை வென்றுயர்ந்து, வாதாபியை உணவாக்கி
இராமனுக்கு நலம் சேர்த்து, சிவத்தை உணர்வாக்கி
இல்லாளும் உடனிருக்க போகமில்லா யோகியாகி
தீண்டாமல் தீண்டியே வளர்த்து வந்த மெய்க்கலையோ
உன் இல்லாள் விழிவிளிம்பில் கற்றுணர்ந்த போர்கலையோ
தீண்டாமல் தீண்டியே வளர்த்து வந்த மெய்க்கலையோ
உன் இல்லாள் விழிவிளிம்பில் கற்றுணர்ந்த போர்கலையோ
நோக்கு வர்மமெனுமுறை, மெய்த்தீண்டா கலையன்றோ !
நீ கொடுத்த கலை இன்று தமிழகத்தில் இல்லையென்று
மடமை பேசும் மக்கள்காள் மாநிலத்தில் இருக்கின்றார்
விழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ
வழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்!
வள்ளுவனும் கண்டறிந்த விழி மேன்மை தொலைந்திடுமோ?
கண்ணோடு கண்ணினை நோக்கக்கின் என்றதும்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் என்றதும்
இன்றும்
பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டுவது கண்ணன்றோ?
விழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ
வழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்!
கம்பனும் காட்டிய விழி மேன்மை தொலைந்திடுமோ?
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றைஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட இல்லையேல்
வில் முறிப்பது எங்கனம்? ராம காதை எங்கனம்?
விழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ
வழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்!
உறுதி கொண்ட நெஞ்சும், தெளிவு பெற்ற மதியும்
களி படைத்த மொழியும், ஏறு போல் நடையும்
ஒளி படைத்த விழி வழியே விளக்ககூவிய
பழிப்பிலா பழுதிலா பாரதி சொல் கேட்கிலையோ?
உறுதி கொண்ட நெஞ்சும், தெளிவு பெற்ற மதியும்
களி படைத்த மொழியும், ஏறு போல் நடையும்
ஒளி படைத்த விழி வழியே விளக்ககூவிய
பழிப்பிலா பழுதிலா பாரதி சொல் கேட்கிலையோ?
விழி வழியே தாய்மை கண்டேன், விழி வழியே கருணை கண்டேன்
விழி வழியே பாசம் கண்டேன், விழி வழியே அன்பும் கண்டேன்
விழி வழியே வறுமை கண்டேன், விழி வழியே வலியும் கண்டேன்
விழி வழியே வன்மை கண்டேன், விழி வழியே மெண்மை கண்டேன்
விழி வழியே பெண்மை கண்டேன், பெண்மையின் பெருமை கண்டேன்
பெண்மையின் பொறுமை கண்டேன், பொறாமை எனும் கருமை கண்டேன்
பன்மையிலும் மடமை கண்டேன், வன்மையிலும் நன்மை கண்டேன்
கடைக்கண் பார்வை தன்னில் மலைப்பெயர்க்கும் சக்தி கண்டேன்
கற்பு நெறி பார்வையிலே பேராண்மை வளர கண்டேன்
வாள் கொண்ட கண்களினால் போராண்மை மிளிர கண்டேன்
குறுமுனியே, நீ கொடுத்த நோக்கு வர்மம்
எனும் கலையை ஆண்டாண்டு வாழவைத்தோம்!
எம் ஆசான் வள்ளுவனின் வாய்மொழியில்
ஒறுத்தாரை பொறுத்து
பிறிதின்நோய் தன் நோய்ப்போல் போற்றி
கொலையுணர்வைக் கொன்று,
கொல்லாமை வளர்த்து
நீ ஈன்ற தீண்டாக் கலையில்,
வன்மை அகற்றி
இன்னா கலையாக இனிமையைக் கூட்டி
வாழ்வாங்கு வாழவைத்தோம்!
எம் ஆசான் வள்ளுவனின் வாய்மொழியில்
ஒறுத்தாரை பொறுத்து
பிறிதின்நோய் தன் நோய்ப்போல் போற்றி
கொலையுணர்வைக் கொன்று,
கொல்லாமை வளர்த்து
நீ ஈன்ற தீண்டாக் கலையில்,
வன்மை அகற்றி
இன்னா கலையாக இனிமையைக் கூட்டி
வாழ்வாங்கு வாழவைத்தோம்!
மங்கையவள் மைவிழியில் நாணமாக பூட்டி வைத்தோம்
மடந்தையவள் வாள் விழியில் காதலாக தீட்டி வைத்தோம்
அரிவையவள் கயல் விழியில் அம்பாக மாட்டி வைத்தோம்
தெரிவையவள் வேல் விழியில் கற்பாக கட்டி வைத்தோம்
அன்னையின் முது விழியில் தாய்மையாக போற்றி வைத்தோம்
அன்பே சிவமென்று கருணையாக ஏற்றி வைத்தோம்!
Happy Reading!
(happynhandsome@gmail.com)
PS: Some of you may not know that each stage(based on age) of a male and female has a name in Tamil and this is as follows. You may notice them above.
பெண்களின் 7 பருவங்கள் : பேதை(till 8) , பெதும்பை(9-10) , மங்கை (11-14), மடந்தை (15-18), அரிவை (19-24),தெரிவை (25-29), பேரிளம் பெண்(above 30).
ஆண்களின் 7 பருவங்கள் : பாலன் (till 7), மீளி (8-10), மறவோன் (11-14), திறவோன் (15), விடலை (16), காளை (17-30), முது மகன் (above 30).