Chicklet - Add to Google Homepage

Add to Google Reader or Homepage

Friday, June 17, 2011

Secret of Happiness!

It was 5.30am today morning when my alarm clock was nagging like a girl friend (Shrill, non-stop, not bothered in what state i was in) sort of complaining against me not to cuddle between the sheets, probably thinking that the bed was my another girlfriend and wanted me to separate from her then and there. There are many gadgets which are more intelligent than average humans but was surprised that there has not been any innovation in the alarm clocks over these years.

Why can't intelligence be built into alarm clocks that understands what did i do last night, why did i sleep so late, check the current state of my bliss and finally realize there is no point in screaming now?  Least it can be designed to be kind. Is some one hearing?

Nevertheless i had a flight to catch and any of the above innovation would have certainly screwed my day. I was quickly ready and was reading a book where i came across this beautiful poem on the "Secret of Happiness" which i thought i would share:

THE SECRET OF HAPPINESS..... by Burleigh


I followed happiness to make her mine,
Past towering oak and swinging ivy vine.
She fled, I chased, over slanting hill and dale,
Over fields and meadows, in the purpling vale
Pursing rapidly over dashing stream,
I scaled the dizzy cliffs where eagles scream;
I traversed swiftly every land and sea,
But always happiness eluded me.
Exhausted, fainting, I pursued no more,
But sank to rest upon the barren shore.
One came and asked for food, and one for alms;
I placed the bread and gold in bony palms;
One came for sympathy, and one for rest;
I shared with every needy one my best;
When, lo! Sweet Happiness, with form divine,
Stood by me, whispering softly, “I am thine.”



Some how i felt so good reading this, I was tempted to translate it in Tamil and here is the scribbling below, which was completed in about an hours time during the flight. The concept i have taken is Giving (Sharing) and Love are the mother and father of happiness, correlating that if you have unconditional love and exhibit the same by dedicating your life to others then happiness is a natural offspring. You MAY like it if you can read தமிழ் :) ...

இன்பமென்ற இனியவளை 
காதல் கொள்ள எண்ணினேன்!
காசு பணம் பெருக்கினேன்
காடு மலைகள் ஏறினேன்
கடல் கடந்து தேடினேன்
நாடு நகரம் மாறினேன்
நதியில் நன்று நீந்தினேன்
கணினி ஊர்தி வாங்கினேன்
புதிய மனைகள் புகுந்திட்டேன்  
நாடினேன் ஓடினேன்
தேடினேன் வாடினேன் 
காதலியை காணவில்லை !
காதல் செய்ய யாருமில்லை !!

உச்சி மலையில் நின்றாலும்
ஊடகத்தே சென்றாலும்
வணிகத்திலே வென்றாலும்
வகை வகையாய் தின்றாலும்
உறவுகள் பல கொண்டாலும்
மஞ்சத்திலே வென்றாலும் 
கோவில் குளம் நடந்தாலும்
நதியில் சென்று மூழ்கினாலும்
மனைவியுடன் இன்பத்திலே
பிள்ளைகள் பல பெற்றாலும் 
காதலியை காணவில்லை !
காதல் செய்ய யாருமில்லை !!

நாட்கள் பல ஓடின
நாற்பதை நான் தாண்டினேன்
தேக பலம் தொலைதிட்டேன்
காதலியின் ஆசையிலே கனவை 
மட்டும் தொலைக்கவில்லை !!

ஓட ஓட ஒழியவும்
நாட நாட நழுவவும் 
உண்டென்று கொள்ளவும்
இல்லையென்று தள்ளவும்
இன்பம் ஓர் கானல் நீர்
என்பதை நான் உணர்ந்திட்டேன்! 
ஆடி அடங்கும் வாழ்கையின் 
தத்துவம்  அறிந்திட்டேன்! 

களைப்புடன் உளைச்சலும் நாற்பதின் நண்பராய் 
கசப்புடன் நினைவுகள் அழையா விருந்தாளியாய்
என்னை ஆட்கொள்ளவே ஆசையாய் அணைக்கவே 
ஓட்டமில்லா ஓசையில்லா ஓரிடத்தில் ஒற்றையில்
மாற்றமில்லா மறுப்புமில்லா மனதுடன் இருக்கையில் 
வாட்டமுடன் வறுமையுடன் விழியிலே வலியுடன் 
கையை ஏந்தும் சிறுவனுக்கு நாலு காசு தந்திட்டேன் 
விழியிலே வலியுடன் வாழ்வின் வழியும் மிளிரவே 
ஈய நானும் தளர கண்டேன் எந்தன் மனதின் பாரமே!
உடலில் ஊனம் உடையரும், கருணை வேண்டும் உயிர்களும்
மனதில் ஊனம் உடையரும், அன்புக்கேங்கும் மனிதரும்
சிலரின் கவலை குறையவே வாழ்க்கையை வாழ்ந்திட்டேன் !!
இளமையில் வறுமையும், ஆற்றுணா கொடு நோயும் 
இல்லா உலகம் இயக்கவே இயன்றதை செய்திட்டேன் !!

கல்வி என்ற வித்திட்டு
விநயமென்ற உரம் சேர்த்து 
ஈதல் என்ற நீர் நிரப்பி 
பகுத்தறிவு மரம் வளர்த்து
தவமென்ற இலை தழைக்க 
அன்பென்ற மொட்டரும்ப 
தரும மலர் பூத்திட்டு 
அமைதியென்ற கனி பழுக்க 
வாழ்க்கை என்ற போக வனம்
பற்றின்றி வளர்த்திட்டேன்!   

அவ்வனத்தில் ஓர்நாளில் 
இன்பமென்னும் இளமங்கை
சரணடைந்தேன் நின்னையே 
நின் நீங்கா நிழலாவேன் ! 
உனை அகலா வினையாவேன்
ஏற்றுக்கொள் எனை என்றாள் !!


இன்பமென்னும் இனியவளை நாடினேன் தேடினேன் 
அந்நங்கை என் வலையில் என்றுமே சிக்கவில்லை!
அன்பென்ற மொட்டரும்ப போக வனம் தன்னிலே
அழையாமல் வருந்தி வந்து எனை விட்டு அகலவில்லை!

நல்வாழ்வின் முதற் பாடம் அன்று தானே புரிந்தது
என்வாழ்வின் பயனதுவே என்றுணர்ந்து இனித்தது ! 
அன்பு என்ற தத்துவத்தின் அடிமை தானே இன்பமே !
ஈதல், காதல் அம்மையப்பன் பிள்ளை தானே இன்பமே !



அன்பு என்ற தத்துவத்தின் அடிமை தானே இன்பமே !
ஈதல், காதல் அம்மையப்பன் பிள்ளை தானே இன்பமே ! 


Happy reading!